O2O Exam Complete Guide for Parents and Students

க.பொ.த. சாதாரண தர பரீட்சை திகதியில் மாற்றம்?

நாடு முகங்கொடுத்துள்ள கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக, ஜனவரி மாதம் நடைபெறவுள்ள கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சர் முக்கிய விடயமொன்றை பகிர்ந்துள்ளார்.

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையானது, தீர்மானிக்கப்பட்ட திகதியில் நடத்தப்படுமா? அல்லது திகதிகள் மாற்றப்படுமா? என்பது தொடர்பில் எதிர்வரும் 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும்.

குறித்த தகவலை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் பரீட்சைகளின்போது சிறந்த பெறுபேற்றினைப் பெறுவதற்கு முதலாம் பகுதி வினாத்தாளில் அதிக புள்ளிகள் பெறவேண்டியது அவசியமாகும்.

இதனை தொடர்ச்சியாக அதிக பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் சாத்தியப்படுத்தலாம்.

எனவே நாள்தோறும் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தினை ஒதுக்கி ஒன்லைனில் புதிய வினாக்களை பயிற்சி செய்யும் முகமாக o2oexam.com எனும் இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தளத்தில் பதிவு செய்து முற்றிலும் இலவசமாகப் பயன்பெறலாம்.

தற்போது தரம் 3 முதல் 5 வரையான மாணவர்களுக்கு 6 பாடங்களில் நாள் ஒன்றிற்கு 30 வினாக்கள் வீதம் மாதாந்தம் 900 வினாக்கள் தரப்படும்.

தரம் 6 தொடக்கம் 11 வரையான மாணவர்களுக்கு 7 பாடங்களில் நாள் ஒன்றிற்கு 35 வினாக்கள் வீதம் மாதாந்தம் 1050 வினாக்களும் தரப்படும்.

வினாக்கள் திகதிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு நாளும் காண்பிக்கப்படும்.

(2021 ஆம் ஆண்டு முதல் வினாக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக்கப்படும்)

எனவே இச் சந்தர்ப்பத்தினை நழுவ விடாது மாணவர்கள் அனைவரும் பதிவு செய்து நாள்தோறும் பயிற்சி பெறுவதுடன், உடனுக்கு உடன் சரி, பிழைகளை தெரிந்துகொள்ள முடியும்.

அத்துடன் மாவட்ட நிலை, அகில இலங்கை ரீதியிலான நிலை என்பவற்றினையும் அறிந்துகொள்ள முடியும்.

எவ்வாறு பதிவு செய்து பயன்படுத்துவது என்பதனை கீழுள்ள வீடியோவில் பார்த்து அறிந்துகொள்ள முடியும்.